Date:

மலை காட்டுப்பகுதிக்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு – நுவரெலியாவில் சம்பவம்

நானுஓயா நிருபர்

நுவரெலியா, பிதுருதலாகல மலை காட்டுப்பகுதில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற 72 வயதுடைய நுவரெலியா பீட்ரு தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கொலந்துவேலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விறகு வெட்டச் சென்று மாலை நேரம் வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் , பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விறகு சேகரித்துக் கொண்டிருந்த இடத்தில் சரிவான பகுதியில் இருந்து
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு இரவு சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் , நுவரெலியா மரணவிசாரணை அதிகாரியான பாலசேகரன் ருத்திரசேகரனும் சடலத்தை பார்வையிட்டதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு நுவரெலியா மாவட்டபொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட நபரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் உடலுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

இந்த பிரேத பரிசோதனையை நுவரெலியா சட்ட வைத்தியர் ஐ. கே. எஸ்.கே.வீரசேக்கர மற்றும் நுவரெலியா மரணவிசாரணை அதிகாரி பாலசேகரன் ருத்ரசேகரன் மேற்கொண்டிருந்தனர். என்பதும் குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...