பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும் ‘நோனா அக்கா’ என்ற பெண் 6,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் பதுளை பஹல்கம பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் எனவும் அவர் நீண்டகாலமாக ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.