பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்த இலங்கைக்கு கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பொருட்கள் சேவைகளுக்கான கட்டண செலவுகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (10) முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.