சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த விலைக்குறைப்பு தொடர்பான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முதல் நடைமுறையாகும் வகையில் பிரிமா நிறுவனம், கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.