மின் கட்டணத்தை குறைப்பு தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் கருத்து வௌியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்றார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச இன்றையதினம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரது ஒத்துழைப்பு கிடைக்குமாக இருந்தால் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்றார்.