சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மரணத்திற்கு காதல் தொடர்ப்பு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த மாணவியின் தாயார் குறித்த மாணவி தந்தையின் பராமரிப்பில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்த மாணவியுடன் சிறிது காலம் காதல் உறவில் ஈடுபட்டு வந்த வேறு பாடசாலை மாணவன் ஒருவர் தனது உறவை முறித்துக் கொண்டதையடுத்து மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.