Date:

இந்தியாவின் கேரளாவில் தீ விபத்து : கழிவு ஆலையிலிருந்து கிளம்பிய நச்சுப் புகையில் சிக்கி தவிக்கும் கொச்சி

இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது.

மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தினமும் டன் கணக்கிலான குப்பைகளை பதப்படுத்தி வரும் இந்த உள்ளூர் கழிவு மேலாண்மை ஆலையில், கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து நீடித்து வருகிறது.

A photo of firefighters at the scene during the 2021 fire

அந்த பகுதியில் வசித்து வரும் உள்ளூர் மக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பட்சத்தில் கட்டாயம் N95 மாஸ்க் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நச்சுப் புகை கட்டுக்குள் வரும் வரை, குழந்தைகளின் நலனைக் கருதி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாமென உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிடைத்த தகவலின்படி, தீ விபத்து தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது எனவும், விரைவிலேயே முழுமையாக அனைத்து தீயும் அணைக்கப்படும் எனவும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல கழிவு மேலாண்மை ஆலைகளில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

பெரும்பாலும் குப்பை கிடங்குகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மக்கும்போது, உருவாகும் மீத்தேன் வாயுக்கள் இது போன்ற தீ விபத்துகளை ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...