கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கிற்காக முச்சக்கரவண்டியில் நபர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தப் போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை துப்பாகியால் சுட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.