Date:

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் – 5 பொலிஸார் காயம் அதில் ஒருவருக்கு இரு காதுகள் இழப்பு

வீரக்கெட்டியவில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரதேசவாசிகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொதுமக்கள் காயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனதெனிய பிரதேசத்தில் கசிப்பு சுற்றிவளைப்பிற்கு சென்று திரும்பும் போது அத்தனயாய பிரதேசத்தில் வீதியில் நின்ற பலரை வீரக்கெட்டிய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இரு இளைஞர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியது.

நேற்று இடம்பெற்ற மோதலில் இடையில் தலையிட்ட ஒருவர் கடித்ததில் உப பொலிஸ் பரிசோதகர் தனது இரண்டு காதுகளையும் இழந்துள்ளதாக வீரகட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலின் போது காதுகள் கடிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோதலில் காயமடைந்த 2 பொதுமக்களும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...