தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசில், அவர் கடந்த காலங்களில் வகித்து வந்த சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.