நீண்ட தூர ரயில் சேவைகள், எரிபொருள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில்கள் பல தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலமையை கருத்திக்கொண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.