நுவரெலியா – லபுகலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாறையில் இலொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்றைய தினம் (05) இடம்பெற்றுள்ளது.
லபுகலை இருந்து நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றச் சென்ற தொழிலாளர்கள் குழுவே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை லபுகெலே பிரதேச வாசிகள் மற்றுயம் கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்தின் போது லொறியில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், அதில் ஒருவர் லொறியில் இருந்து குதித்துத் தப்பியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாகச் செலுத்தப்பட்ட லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாறையிலிருந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.