கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடப்புஅண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சு மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.