இன்று (03) காலை முதல் கொழும்பு – காலிமுகத்திடல் பிரதேசத்திற்கு பெரும் திரளான மக்கள் படைடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்திற்கு மக்கள் வருவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் ஆமை முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகளை பார்வையிடுவதற்காகவே இவ்வாறு பெருந்திரளான மக்கள் காலை முதல் அங்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த பகுதி ஆமைகளை பாதுகாக்கும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் வனஜீவராசிகள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.