மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யோசனைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை மண்ணெண்ணெய் ரூ. 134 இனால் குறைத்து புதிய விலை ரூ. 330 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.






