பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்றினுள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு்ள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை 8.00 மணியளவில் (28 ) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.