Date:

Breaking: தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி மீது தாக்குதல் – வேட்பாளர் உயிரிழப்பு

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று (27) காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு எதிர்ப்பு´ என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் டிஸ்சார்ஜ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...

நிமல் லான்சா கைது

கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...

அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர்...