மொரட்டுவை நகரில் விற்பனை நிலையத்தில் இன்று (27) அதிகாலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது
பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் இவ்வாறு திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை இருப்பினும் வர்த்தக நிலையத்தில் இருந்த மின்கலங்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு பிரிவினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.