இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் (27) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ளனர்.
நாடளாவியரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்களை கொழும்புக்கு வரவழைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க முக்கியஸ்தர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார்