Date:

கொழும்பு, யாழ்ப்பாணம் நிலநடுக்கம் குறித்த மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேற்கு நேபாளத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, இமயமலையில் உள்ள தர்மசாலாவில் இருந்து 56 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 கிமீ ஆழத்தில் இந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலும் உணர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை கொழும்பு பிரதேசமும் உணர்ந்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன;

“இரண்டு வருடங்களுக்கு முன் இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தை கொழும்பு உணர்ந்தது. அந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். அது 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். இம்முறை நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8 ஆக அதிகரிக்கும். முந்தைய நிலநடுக்கத்தை விட பல மடங்கு வலிமையானது. நாம் உணரும் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கும். யாழ்ப்பாணம் கொழும்பில் அதிர்ச்சியை உணரும்.

துருக்கி-சிரியா நிலநடுக்கக் கோட்டில் இந்தியாவின் இந்தப் பகுதியும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்பட மாட்டது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை – திகதி அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல்...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373