13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிதி நெருக்கடி என்று தொடர்பில் தெரிவித்துக்கொண்டு தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. தேர்தலை நடத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். நிதி இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளமை தவறாகும் என்றார்.
அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள தேல் அவசியமாகும்.
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கம் வெற்றிபெறும் என்பது நிச்சயமற்றது.