தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (23) இரவு குறித்த கார் கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.