பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
இந்த சம்பவம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இருவரும் தரம் 6 மற்றும் 8 ஆம் தரத்தில் கல்விகற்பதுடன், இவர்கள் நெலுவ பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு வந்து மொரவக நகருக்கு செல்வதற்கான பஸ் கட்டணத்தை சாரதி ஒருவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை சீருடை இருவரும் மொரவக நகருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.