Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு (2023) ஜூன் மாத இறுதிக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஆவர்,உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமை வருத்தத்திற்குரிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீடு பணிக்காக வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு தொடர்பிலும் விசம் தெரிவித்துள்ளன.

தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த கொடுப்பனவான 500 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. குறித்த தொகை போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு பணிக்காக ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவான 500 ரூபாவில் இருந்து ரூபா 3,000 ஆக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், அது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...