எரிபொருளுக்கான தற்போதைய QR முறை நீக்கம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை மேம்படுவதன் மூலம் எரிபொருள் பொருள் பிரச்சிணைக்கு தீர்வு காணமுடியும்
என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் மக்கள் தமக்கு தேவையான அளவு எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முன்பைப் போன்று பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சர் தெரிவித்தார்.