நீர்கொழும்பில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த மாணவன் பாடசாலை நண்பர் ஒருவரிடம் கைத்தொலைபேசியைக் கேட்டு சண்டையிட்டு தரையில் வீசியுள்ளார் அந்த தொலைபேசியின் பெறுமதி 350,000 என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொகையை நண்பனுக்கு செலுத்த வேண்டும் என பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.எனினும் குறித்த தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.