Date:

பெற்றோல் தட்டுப்பாடு எனக் கூறியவர் நீதிமன்றில்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எரிபொருள் நிலைமை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதையடுத்து அவர் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள டீசல் 11 நாட்களுக்கும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமானதாகும் என இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த அண்மையில்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில, ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்தார்.

ஏதாவது ஒரு வகையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாயின், அது குறித்து பொதுமக்களுக்கு தாம் அறியப்படுத்துவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றிற்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தது.

பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த வெளியிட்டிருந்த தகவலில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹொங்கொங் அணியை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ணத்தின் இன்றைய (15) போட்டியில் ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுக்களால்...

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...