Date:

கொழும்பில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் – பொலிசார்

கொழும்பில் இன்று (20) பல போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் பொலிஸார் ஒருபோதும் தலையிட மாட்டார்கள் எனவும், ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராகவும் செயற்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதுதொடர்பான நடவடிக்கையை எடுக்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...