Date:

ஹக்கல பகுதியில் டீசல் பவுசர் விபத்து (photos)

ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் கொல்கலன் வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானது எரிபொருள் பவுசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பவுசரே ஹக்கல பூங்கா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

சீரற்ற காலநிலையால், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பவுசரில் 13200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் குறித்த பவுசர் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன .

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா நிருபர் – செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...