இந்தியாவின் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் முயற்சிக்கு மாலைத்தீவு ஆதரவு தெரிவித்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.
15 நாடுகளைக் கொண்ட ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 4 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.