Date:

பஸ் விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (photos)

தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக தனியார் பஸ்ஸில் பயணித்த பயணிகள் ஒரு மணித்தியாலம் பஸ்க்குள் 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதிகளின் கவனயீன செயற்பாடு - விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (படங்கள்) | Accident Sltb Private Bus Dambulla Race Time

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், பொலன்னறுவையிலிருந்து அனுராதபுரம் வழியாக கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த இரண்டு பேருந்துகளும் தம்புள்ளை நகரிலிருந்து ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஒன்றையொன்று முந்திச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பஸ், போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் கடந்து செல்வதற்கு தயாரான போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது இரு பஸ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், தனியார் பஸ்ஸில் மாட்டிக் கொண்டதில் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சிக்கியதால் பஸ்ஸில் இருந்து இறங்க முடியாமல் தவித்ததாகவும் அதில் பயணித்த சிலர் தெரிவித்திருந்தனர்.

சாரதிகளின் கவனயீன செயற்பாடு - விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (படங்கள்) | Accident Sltb Private Bus Dambulla Race Time

தம்புள்ளை பொலிஸார் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை அகற்றி தனியார் பேருந்தில் இருந்து பயணிகளை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பம்

காசா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட...

பொரளையில் தாழிறங்கிய வீதி..! மாற்று வீதிகளைப் பயன்படுத்து.

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க...

முன்னாள் அமைச்சர் டயானாவுக்கு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...