Date:

வாக்களிப்பு ஒத்திவைப்பு -வாக்குச்சீட்டுகளை வழங்கவில்லை

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்த அரசாங்க அச்சக பிரதானி, உரிய தினத்தில் அவற்றை வழங்காமை காரணமாக, எதிர்வரும் 23, 24, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்களிப்பு இடம்பெறும் தினங்கள் மீண்டும் பின்னர் அறிவிக்கப்படுமென சமன் ஶ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...