இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மும்பை ஓசிவராவில் ஒரு ஹோட்டலில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் சிலர் இரண்டாவது முறையாகவும் செல்பி எடுக்க கேட்டு அதற்குப் பிரிதிவிஷா மறுத்து அவரது நண்பர்களுடன் வெளியேறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஒரு எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து, ப்ரீத்திவிஷா நண்பரின் காரை பேஸ்போல் மட்டையால் அடித்து உடைத்திருக்கிறது.
தற்பொழுது இது குறித்து எட்டு பிரிவுகளில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சில புதிய வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகின்றன.
அதில் பிரித்திவிஷா ஒரு இளம் பெண்ணிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்வது தற்பொழுது வைரலாகி இருக்கிறது. அதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
Feeling sad for Prithvi Shaw. pic.twitter.com/cT9ooiZIxz
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) February 16, 2023