உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடும் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்களை எதிர்வரும் திங்கட்கிழமை தலைநகருக்கு வரவழைக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் கீழ்த்தரமான திட்டம் தோற்கடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பொதுச் செயற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.