பல்லேபெத்த பிரதேசத்தில் பஸ்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி தூங்கியதன் காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பஸ் இயந்திரப் பெட்டியில் அமர்ந்திருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (15) அதிகாலை பல்லேபெத்த களுவரகஹா வளைவுக்கு அருகில் யாத்ரீகர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து படுகாயமடைந்த பாடசாலை மாணவன் பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.