ஒருமுறை பயன்படுத்தும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூன் 1 ஆம் திகதி முதல் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் கரண்டிகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள், கப் (யோகட் கப் தவிர), கரண்டி, முட்கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் தயிர் கரண்டி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.