கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள், நியமனம் நாளன்று வருவதைத் தவிர்க்குமாறும் அதற்குப் பதிலாக மறுநாள் வருமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (17) நியமனம் பெற்றவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக திணைக்களம் சனிக்கிழமை (18) திறக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை (20) வழமையான சேவை ஆரம்பமாகும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.