சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பஸ் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (13) காலை மின்னேரிய பஸ் நிலையத்தில் இருந்து ஹிங்குரக்கொட நோக்கி புறப்பட்ட பஸ் எதிர்பாராதவிதமாக இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பஸ் திடீரென வீதியை விட்டு விலகி கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.
விபத்து நடந்த உடனேயே, பஸ் சாரதியை வைத்தியசாலைக்கு அழைத்துசென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.
75 வயதான என்.கே. ஆரியரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.