Date:

BREAKING: “பிரபாகரன் உயிரோடு உள்ளார்”அதிர்ச்சி தகவலுக்கு இலங்கை இராணுவம்

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் எப்போது வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளபிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக இலங்கை இராணுவ ஊடக தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் பழ.நெடுமாறன் தெரிவிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில்,

1.சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

2. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

3. தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

4. விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.

தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

5. இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Pazha Nedumaran has said that LTTE leader Prabhakaran is alive

இதேவேளபிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி  தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும் இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் அவர் தெரிவித்தது பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடந்த இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டார். அவர் மரணமடைந்த விவகாரத்தில் அனைத்து ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான தமிழீழத் தனி நாடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி முன்னின்று நடத்தினார். இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் நடந்த  இறுதிக்கட்ட போர் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ​ை

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள், தளபதிகள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் மரணம் குறித்த மாறுபட்ட தகவல் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373