சமுர்த்தி பயனாளர் ஒருவர் அதிலிருந்து விலகும்போது, அவருக்கு உரித்தான வைப்பு மற்றும் பங்கு பணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் அளெகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமுர்த்தி மானியத்திலிருந்து விலகுபவர்களுக்கு, உரிய வைப்புத்தொகை மற்றும் பங்குகள் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்பவர்களில், சிலர் சில காரணங்களினால் அதனை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, தங்களது வைப்புப் பணம் மற்றும் பங்குகளை பெற்றுக்கொள்வதில் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடுவதாக, சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சமுர்த்தி மானியத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு அவர்களது வைப்புத்தொகை மற்றும் பங்குகளை வழங்குமாறு உரிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
சமுர்த்தி மானியத்தில் இருந்து விலகிய மக்களுக்கு சில சமுர்த்தி வங்கிகள் வைப்புத் தொகை மற்றும் பங்குகளை வழங்கத் தவறி வருவதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமர மத்துமகளுகே குற்றம் சுமத்தியுள்ளார்.