மொணராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய பிரதேசங்களில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் 2.3 ரிச்டர் அளவில் சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.