காத்தான்குடி பகுதியில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்த நபரே வீட்டுக்குள் இருந்த சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவனின் தந்தை நேற்று காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுவன் சந்தேக நபரால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விசாரனைகளை தீவிரப்படுத்திய பொலிஸார் சந்தேகநபரை அன்றைய தினம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.