கண்ணை காண்பித்த ஷிரந்தி சிறைக்கு திரும்பினார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி (First Lady) ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (9) முற்பகல் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக இன்று காலை அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைய, தேசிய கண் வைத்தியசாலையின் விசேட மருத்துவரிடம் காண்பிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

 

இதற்கமைய, இன்று காலை தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை – NSO

இன்று (22) முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ளது.       லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல்...