பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்