இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.