துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக்கா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் செய்திகள் வௌியாகியுள்ளன.
துருக்கியில் 9 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் 8 பேருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் தொடர்ந்தும் இலங்கை தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெண் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் தெரியப்படுத்த தயாராகவுள்ளது எமது ஊடகம் தொடர்ந்து தகவல்களை பெற்றுவருகின்றோம்.