பிறந்து ஒரே நாளான குழந்தையை பொலிஸார் தனது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
உப்புவெளி, வள்ளுவர் கோட்டன் வீட்டுத்திட்டத்திற்கு அருகில் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிசுவை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த பகுதியில் அதிக மழை பெய்ததனால் சிசுவைக் கண்டெடுத்த பெண் தனது வீட்டுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிசு பற்றிய விபரங்கள் தெரியாத பட்சத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.