பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான “நிஞ்ஜா”, கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 8 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளையும், ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 6 இலட்சம் ரூபா பணத்தையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குளி ஹேனமுல்ல முகாமை அண்மித்த பகுதியில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் நிஞ்ஜா எனப்படுபவர் 42 வயதுடைய பெண் ஆவார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கைது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் என்பதுடன் இவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 1ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தற்போது பிரான்ஸில் வெளிநாட்டில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய ரூபனுடன் நெருங்கிய தொடர்பு என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இலங்கையின் மிகவும் ஆபததான பெண் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.