பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றில், திடீரென ப்ரேக் இயங்காமல் போனமையுள்ளது.
சமயோசிதமாக சாரதி அந்த பஸ் மண்மேடொன்றில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பஸ் பெரகல – விகாரகல பகுதியில் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இடது புறத்தில் பாரிய பள்ளம் காணப்பட்டதால் சாதுர்யமாக செயற்பட்ட சாரதி, வீதியின் வலப்பக்கத்தில் உள்ள வடிகாண் ஊடாக பஸ் செலுத்தி மண்மேட்டின் மீது மோதி அதனை நிறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது அவ்வாறு பேருந்து நிறுத்தப்பட்டிருக்காவிடின், மறுபுறத்தில் உள்ள சுமார் 500 மீற்றர் பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்படிகின்றது.
சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். சாரதிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.