படங்கள் கொழும்பு நிருபர் – நசார்
இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம் காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் வீதியின் குறிக்காக வழிமறித்து தடைபோட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு துறைமுக வீதியை அண்டிய பகுதியில் பயணிப்போர் மாற்றுவீதிகளை பயண்படுத்துவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.